21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மூலம் வெற்றிக்கான பாதைகள் - "உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள"

முந்தைய செய்திமடலில் "21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மூலம் வெற்றிக்கான பாதைகள்" கட்டுரையில், நாங்கள் 10 முக்கிய பகுதிகளை முன்னிலைப்படுத்தினோம். இந்தப் பதிப்பில், நாம் பட்டியலில் முதல் பகுதிக்கு செல்கிறோம் - "உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள"

தன்னைப் பற்றி தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

உங்களைப் பற்றி தெரிந்துகொள்வது என்பது நீங்கள் எதில் நல்லவர், எதில் இல்லை என்பதை அறிவதாகும்! இது ஏன் பயனுள்ளதாக இருக்கிறது? வெற்றி என்பது வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக எந்த படியில் இருக்கிறீர்கள் என்பதில் உள்ளது, அதையே நீங்கள் இன்னும் முழுமையாக, மிகச் சிறப்பாகச் செய்வதன் மூலம் மிக எளிதாகச் சாதிக்க முடியும், மேலும் அது உங்கள் பலவீனமான பகுதிகளை கண்டறிந்து மேம்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுத்தரும். இது உங்கள் சுயமரியாதையை மிக உயரத்தில் வைக்கிறது. செல்வாக்கு மிக்க தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர் கேரி வெய்னெர்ச்சுக் கூறுகிறார் “அந்த சுய-மரியாதை நீங்கள் எப்படி உங்களுடைய திறமையை, மதிப்பை கொண்டு வருகிறீர்களோ, அதே போல் மற்ற அனைவருக்கும் ஒரு தனித்துவமான மதிப்பு இருப்பதைக் காண உதவுகிறது”.

இதற்கு சிறந்த உதாரணம் ஸ்டீவ் ஸ்மித். நீங்கள் கிரிக்கெட் ஆர்வலராக இருந்தால், சிறந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை அவரது பேட்டிங் திறமை மூலம் அறிந்திருப்பீரகள். இருப்பினும், அவர் இந்த சுழல் பந்துவீச்சிற்காக ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டு, கீழ் வரிசையில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர் தனது பேட்டிங் திறமையைக் கண்டுபிடித்து மேலும் மேம்பட்டு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக, 60 ரன் சராசரியுடன் திறமை வாய்ந்த டான் பிராட்மேனுடன் ஒப்பிடப்பட்டார்.

சரி, பிறகு உங்களை எப்படி அறிவீர்கள்?

இது ஒரே இரவில் நடந்து முடிவதல்ல, ஒரு தொடர்ச்சியான செயலாகும் - உங்களை நீங்களே அவதானித்து சுய விசாரணை செய்யும் போது உங்களை நீங்களே மீண்டும் மீண்டும் கண்டடைவீர்கள். உங்களை நன்கு புரிந்துகொள்ள நீங்கள் தொடர்ந்து மாற்றியமைத்தும், புதுப்பித்து கொண்டும் இருப்பது மிக அவசியம்.

உங்களை நீங்கள் அறியும் போது, எதிர்காலத்தில் நீங்கள் எங்கே, யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் உங்கள் ஆளுமை மற்றும் உங்கள் எதிர்கால இலக்குகளுக்கான வரம்புகள் பற்றி உங்களுக்குத் தெரியும் உங்களின் தனிப்பட்ட திட்டத்தை அதற்கு எற்ற வகையில் தயாரிக்கலாம். உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வது, நீங்கள் மேலும் நல்ல குணங்களைக் கொண்டிருப்பதற்கும், உங்களை ஒரு முழுமையான நபராக வலுப்படுத்துவதற்கும், உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளவும், திசை வழிகாட்டியாகவும், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை இலக்குகளை நிறைவேற்றவும் உதவும்.

தங்கள் பலவீனங்களை வென்று, பலத்தை முதன்மைபடுத்திய ஆளுமைகளும் உண்டு - அவர்களில் ஒருவர் சிறந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங். ஸ்டீபன் ஹாக்கிங் இள வயதிலேயே மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்டார், ஆனால் அது அவரை சிறந்த இயற்பியலாளர்களில் ஒருவராகவும் பிரபல எழுத்தாளராகவும் ஆவதைத் தடுக்கவில்லை (அவரது புத்தகம் 'எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்' நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்தது சாதனை படைத்தது).

ஒருவரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் தன்னைக் மீண்டும் மீண்டும் அறிந்து கொள்வது அவரை நெடுந்தொலவு செல்ல வைக்கும்