21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மூலம் வெற்றிக்கான பாதைகள்

எனது திறமைக்கு ஏற்ற புதிய வேலைக்கு விண்ணப்பித்தேன், ஆனால் எனக்கு வேலை கிடைக்குமா?

நான் 10 காலியிடங்களைக் கொண்ட ஒரு வேலைக்கு விண்ணப்பித்தேன், அதே பதவிக்கு 1000+ பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த வேலையைப் பெறுவதற்கான எனது வாய்ப்புகள் என்ன? மற்றவர்களை விட நான் வேலைக்கு மிகவும் பொருத்தமானவன் என்பதை நிரூபிக்க நான் ஒரு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் எப்படி?

வேலை வழங்குபவர் ஒரு விண்ணப்பதாரரிடம் கவனிக்கும் முக்கிய பண்புகள் இங்கே உள்ளன, பெரும்பாலான நேரங்களில் இவையே தீர்மானிக்கும் காரணிகளாகும். இவை ஒரு வேலையைப் பெறுவதற்கு மட்டுமல்ல, அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பல்வேறு படிகளில் செல்லவும் சிறந்த திறன்கள். இந்தக் கட்டுரையில், பணியமர்த்தும்போது ஒரு வேலையளிப்பவர் ஒரு விண்ணப்பதாரரிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நாங்கள் புரிய வைக்க போகிறோம் - புதியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் இருவருக்கும் பொருந்தும் என்றாலும், புதியவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் அந்த கட்டத்தில் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்ப திறன்கள் குறைவாக இருக்கும். இந்தத் திறன்களை வளர்த்துக்கொள்வது, நீங்கள் அனைத்து நேர்காணல்களிலும் எந்த வகையான பாத்திரங்களுக்கும் உங்களை பந்தயத்தில் நிச்சயமாக முன்னிலையில் வைக்கும்.

"21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மூலம் வெற்றிக்கான பாதைகள்" கட்டுரை தொகுப்பின் முதல் பதிப்பில், திரு. ரெங்கன் அந்த முக்கிய திறன்களை சுருக்கமாக கோடிட்டுக் காட்டுகிறார். எங்கள் அடுத்தடுத்த பதிப்புகளில், இந்தத் திறன்கள் ஒவ்வொன்றையும் இன்னும் விரிவாகப் பார்ப்போம். இந்த திறன்கள் ஒரு குறுகிய காலத்தில் கற்றுக் கொள்ளக்கூடியவை அல்ல, நீண்ட கால உழைப்பும் புதிய முறையும் தேவைப்படும்.

ஆளுமை / வாழ்க்கை திறன்கள..........

மாணவர்கள்/இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற அடி ப்படை ஆளுமை திறன்களைவளர்த்துக்கொள்ள வேண்டும் என உலக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவை:

  • தன்னைத்தானே அறிதல்

  • தகவல் தொடர்பாற்றல்

  • பிறருடன் உறவு கொள்ளும் / புரிந்து கொள்ளும் திறன்.....

  • உணர்ச்சிகளை கையாளும் திறன்

  • மாறுபட்டு சிந்திக்கும் திறமை

  • முடிவெடுக்கும் திறமை

  • பிரச்னைகளை தீர்க்கும் திறன்

  • மன அழுத்த மேலாண்மை

  • நேரத்தைக் கையாளும் திறன்

  • இவைகளுடன் மொழி ஆளுமை

மொழிபெயர்ப்பு: திருமலை வீராசாமி